7.5% உள்ஒதுக்கீடு – பா.ம.க-வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Oct 31, 2020, 21:02 IST1604158340000
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, திருவள்ளூரில் பாமகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாலா கலந்துகொண்டு, கடைகள், வீடுகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்க பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததே காரணம் என்றும், இந்த உத்தரவை பெற்றுத் தந்த மருத்துவர் ராமதாஸ் சார்பில் இனிப்புகளை விநியோகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.