கார் வாங்குவதுபோல நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்... சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்!

 
police chase

பொள்ளாச்சி அருகே கார் வாங்குவது போல நடித்து தங்க சங்கிலியையும் சேர்த்து பறித்துச் சென்ற 4 இளைஞர்களை திரைப்பட பாணியில் போலீசார் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர். 

உடுமலை தளி பகுதியில் மாமரத்துப்பட்டி தென்குமாரபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் என்கிற சேகர். இவரிடம் தூத்துக்குடியை சேர்ந்த ராபின்ராஜ் என்பவர் கார் வாங்குவதாக கூறி அணுகி உள்ளார். மாமரத்துப்பட்டிக்கு தனது நண்பர்கள் மூவருடன் வந்த ராபின்ராஜ், காரை ஓட்டிப்பார்ப்பதாக கூறி சேகரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அந்தியூர் செல்லமபாளையம் சாலையில் காரை நிறுத்தி தங்கராஜை மிரட்டி 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு நகையுடன் தப்பிச்சென்றார்.  இதுகுறித்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். 

police chase


கொள்ளையர்கள், பொள்ளாச்சி வழியாக தப்பிச்செல்வது தெரிந்ததை அடுத்து, பொள்ளாச்சி - திப்பம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மாருதி காரை போலீசார் நிறுத்த முயன்றும், நிற்காமல் வேகமாக சென்றது. இதனை அடுத்து போலீசார் அந்த காரை துரத்திச் சென்றனர். இதனை அறிந்த இளைஞர்கள் வேகமாக தப்பிச்செல்ல முயன்ற நிலையில்,பொள்ளாச்சி - பழனி சாலையில் சினிமா பாணியில் அவர்களை துரத்திச் சென்று சின்னபாளையம் பகுதியில் போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, காரில் இருந்த 4 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

chase

அதில், தங்கராஜிடம் கார் மற்றும் 3 பவுன் நகைய பறித்து வந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த ராபின்ராஜ், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கார் மற்றும் நகையை பறிமுதல் செய்த போலீசார், தளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து,  4 பேர் மீதும் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.