மண்டபங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சி குறித்து மாநகராட்சி இணையதளத்தில் தெரியபடுத்த வேண்டும் - கோவை மாநகராட்சி

 
cbe commissioner

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட திருமண மண்டபங்கள், கோவில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர்  ராஜகோபால சுன்கரா உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் இன்று முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும் இரவுநேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தி, புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது.

marriage

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்திடும் வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில்  பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களை https://covid/ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற மாநகராட்சியின் கோவிட் இணையதளத்தில் தெரியப்படுத்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் கோமாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.