‘கௌரவமான ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

‘கௌரவமான ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய, மாநில அரசுகள் ஓய்வூதியதாரர்களுக்கு கௌரவமான ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் படி, ஒவ்வொரு ஆண்டும் அக்.1ம் தேதி ஓய்வூதியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்று ஓய்வூதியர் தினத்தையொட்டி, தஞ்சையில் கௌரவமான ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என ஓய்வூதியதியதாரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய காரணம், ஓய்வூதியத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது தான்.

‘கௌரவமான ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தும், தனியார் மயமாக்கும் முடிவை கைவிட விடக்கோரியும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அரசு ஓய்வூதியம், சிறந்த போக்குவரத்து, தரமான பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்க உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், இயற்கை வளங்களை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விளை நிலங்களை அரசு தாரை வார்க்கக்கூடாது என்றும் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் விவசாய மசோதாக்களை திரும்ப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.