பள்ளி மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – 3 பேர் கைது!

 

பள்ளி மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – 3 பேர் கைது!

தென்காசி

வாசுதேவநல்லூரில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர் .

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேல சங்கனாப்பேரி இந்திரா காலனியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் மாரிதுரை (21). இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் 2 பேருடன் சேர்ந்து, மதுரை விமான நிலையத்திற்கு தாங்கள் குறிப்பிடும் தலைவரின் பெயரை சூட்ட வேண்டுமென கூறி வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து உள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – 3 பேர் கைது!

மேலும், அவ்வாறு இன்றி வேறு பெயரை சூட்டினால் வாசுதேவநல்லூர் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களின் தலை துண்டிக்கப்படும் என கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர். இதனால் வாசுதேவநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மஞ்சணத்தி தெருவை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் மருதுபாண்டியன் (25) போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் மீது, வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாரிதுரை மற்றும் 2 சிறுவர்களை கைதுசெய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.