காலேஜ் பாத்ரூமில் குழந்தை பெற்ற மாணவி! சிசுவை மறைத்துவைத்துவிட்டு கிளாஸ்க்கு போன தாய்!

கும்பகோணம் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள அரசினர் (மகளிர்) கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவி இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றுள்ளார். குழந்தையை அருகில் உள்ள மறைவிடத்தில் வைத்துவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவி மயங்கமடையவே கும்பகோணம் அரசினர் பொது மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார் .அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் குழந்தை பெற்றுள்ளார் என்பதை தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த மாணவியிடம் நடந்த விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்டு குழந்தை கல்லூரி கழிவறை அருகில் உள்ள மறைவிடத்தில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். மருத்துவமனையில் குழந்தையும். தாயும் நலமுடன் உள்ளனர் என கூறப்படுகிறது.
குழந்தை பெற்றெடுத்த மாணவியின் சொந்த ஊர் நாச்சியார் கோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் அருகே உள்ள அண்டகுடையான் என்ற கிராமம் என்றும், மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் காதலித்த உறவினரே காரணம் என்றும் தெரியவந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த 27 வயதுடைய (சக்தி) உறவினரை ஒரு வருட காலமாக காதலித்ததாகவும் அதனால் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காதலித்த நபர் விரைவில் 19 வயது மாணவியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதனால் காதலித்த உறவினர் மீது மாணவி தரப்பில் புகார் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தாரும், திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.