மொடக்குறிச்சி தொகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பல்நோக்கு முகாம்!

 
saraswati

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பல்நோக்கு  முகாமை, மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
 
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு துறை சார்பில் மொடக்குறிச்சி தொகுதி கொடுமுடி ஒன்றியம் எஸ்.எஸ்.வி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பல்நோக்கு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மொடக்குறிச்சி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், காலாவதியான அட்டை புதுப்பித்தல், வருவாய் துறையின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், சுயதொழில் செய்ய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடன் பெற விண்ணப்பித்தல், சக்கர நாற்காலி போன்ற நலத்திட்டங்களை வழங்கினார்.     

erode
 
மேலும், மாற்றுத்திறனாளின் குறைகளை கேட்டறிந்ததுடன், அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய விரைவில் வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இந்த நிகழ்வில், அதிமுக ஒன்றிய செயலாளர் புதூர் கலைமணி, பேரூர் செயலாளர் மனோகரன், முன்னாள் தலைவர் சரவணன், எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், ஒன்றிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள், அரசு பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்