நெல்லை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

 
rape

நெல்லை மாவட்டம் பத்தமடையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி. இவரது மனைவி 26 வயது இளம்பெண். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால அவர் பத்தமடை சிவானந்தா காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

arrest

அப்போது, பத்தமடை அம்பேத்கர் தெருவைச சேர்ந்த ராஜா என்பவரது மகன் அஜித்குமார் (27) என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் பத்தமடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.