அவினாசி அருகே தனியார் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர் பலி!

 
drowning

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தனியார் குட்டையில் குளித்தபோது நீரில் மூழ்கி 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் மதன்குமார் (11). இவர் அவினாசி அடுத்துள்ள ராக்கியாபாளையம் அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த சிறுவன் மதன்குமார், நேற்று அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் சேர்ந்து அங்குள்ள தனியாருக்கு சொந்தமான குட்டையில் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.

tiruppur

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற சிறுவர்கள், அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அந்த பகுதி மக்கள் குட்டையில் இறங்கி தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து வந்த அவினாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் குட்டையில் இறங்கி தேடினர். அப்போது, சிறுவன் மதன்குமாரை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். இதனை அடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.