செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை!

 
poison

திருவண்ணாமலை அருகே செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் 9ஆம் வகுப்பு மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை அருகே உள்ள வாழவச்சனூர் பகுதியை சேர்ந்தவர் தணிகாச்சலம். தொழிலாளி. இவரது மகள் வர்ஷா(14). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வர்ஷா வீட்டில் வேலை  செய்யாமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய், வர்ஷாவை கண்டித்துள்ளார். இதனால் வர்ஷா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

tiruvannamalai gh

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வர்ஷா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று வர்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வானாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.