ரயில்வே பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயற்சி... சேலம் டிஎஸ்பி-யின் ஜீப் டிரைவர் கைது!

 
arrest

ஈரோட்டில் ரயில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக, சேலம் டிஎஸ்பி-யின் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (32). இவர் சேலம் ரூரல் டி.எஸ்.பி. ஜீப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஈரோடு ரெயில்வேயில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். அதே குடியிருப்பு பகுதியில் 29 வயதான பெண் ஒருவர் ரெயில்வே போலீசில் பணிபுரிந்து வருகிறார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு  குழந்தை இல்லை. பெண் போலீசிடம் செல்வன் நட்பாக பழகி வந்தார்.

sexual abuse

இந்த நிலையில், சம்பவத்தன்று செல்வன், அந்தப் பெண் போலீஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த அந்த பெண் போலீஸ் கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர், அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளர் விஜயா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 

தொடர்ந்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், தவறாக நடக்க முயற்சி செய்தல், பெண் வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.