நிலத்தை வரன்முறைப்படுத்த ரூ.25 ஆயிரம் லஞ்சம் - வட்டார வளர்ச்சி அலுவர் கைது!

 
bribe

கரூரில் வீடுமனைகளை வரன்முறை செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவியின் பெயரில் க.பரமத்தி பகுதியில் உள்ள 4 பிளாட்களை வரன்முறை படுத்துவதற்காக க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் குமரவேலிடம் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று முன்தினம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேலை காண சென்றபோது, அவர் நிலத்தை வரன்முறை படுத்த ரூ.1.25 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை விரும்பாத சக்திவேல், இதுகுறித்து கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

arrest

தொடர்ந்து, அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் ரொக்கப் பணத்தை நேற்று சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சென்று குமரவேலிடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், அவரை கையும் களவுமாக கைதுசெய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.