கரூரில் காணாமல்போன 120 செல்போன்கள் மீட்பு... உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி. சுந்தரவடிவேல்!

 
karur sp

கரூர் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.24 லட்சம் மதிப்பிலான 120 செல்போன்களை போலீசார் மீட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேலு அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.  

கரூர் மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க, மாவட்ட எஸ்.பி. சுந்தவடிவேல்,  ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் சைபர் கிரைம் ஆய்வாளர் அம்சவேணி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

karur

இதன் காரணமாக, சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 செல்போன்களை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து, கைப்பற்ற செல்போன்களை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி சுந்தரவடிவேலு, உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

பின்னர் பேசிய எஸ்.பி சுந்தர வடிவேல், செல்போன்களை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வதும் குறித்து, செல்போன்கள் காணாமல் போனால் அதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கும்படியும் அறிவுறுத்தினார்.