பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா - காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்!

 
congress

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தியின் பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின், பொறுப்பாளருமான பிரியங்கா காந்தியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ்  சார்பாக, மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் மாவட்ட விவசாயிகள் பிரிவு தலைவர் பி.ஏ.பெரியசாமி தலைமையில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் சுரேஷ் முன்னிலையில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

erode generic

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, புனிதன், வெங்கடாசலம், கே.எஸ்.செல்வம், ஆர்.கே.பிள்ளை, மண்டல தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக், மாவட்ட பொது செயலாளர்கள் கண்ணப்பன், கனகராஜ், வின்சென்ட், கராத்தே யூசுப், சச்சிதானந்தம், மாவட்ட செயலாளர்கள் அப்புசாமி, ஈ.எம்.சிராஜ்தீன், மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவர் முகமது யூசுப், ஊடகப் பிரிவு தலைவர் முகமது அர்சத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.