தேனியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
theni collector theni collector

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 

இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்புகள் மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.

theni employment

எனவே வேலைநாடுநர்கள் தங்களது சுய விபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு, தேனி மாவட்ட வேலவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04546 - 254510 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள்  பயன் படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.