செந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர் பலி, 30 பேர் காயம்!

 
ariyalur ariyalur

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மேலும், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து இன்று காலை தனியார் பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி மாவட்டம் துறையூருக்கு சென்று கொண்டிருந்தது. செந்துறையில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ராயம்புரம் என்ற இடத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையில் பள்ளம் தோண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த தனியார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த கார்த்தி என்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

accident

மேலும், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் பலியான மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ச