உவரியில் கடலில் குளித்த பிளஸ் 2 மாணவர் அலையில் சிக்கி பலி!

 
drowned

நெல்லை மாவட்டம் உவரியில் நண்பரின் பிறந்தநாளையொட்டி கடலில் குளித்த பிளஸ் 2 மாணவர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பூச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் திருமால். இவரது மகன் மதன்(17). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதனின் வகுப்பில் படிக்கும் நவீன் என்ற மாணவருக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதனால் மதன், நவீன் உள்ளிட்ட 5 மாணவர்கள் வகுப்பில் இருந்து பாதியில் வெளியேறி, உவரி கடற்கரை பகுதிக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது, 5 பேரும் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக  மதன் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

nellai

இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், கூச்சலிட்டனர். இதனை அடுத்து, அந்த பகுதி மீனவர்கள் கடலில் தேடியபோது, மயங்கிய நிலையில் மதன் மீட்கப்பட்டார். இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மதன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உவரி காடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.