பெற்றோர் திட்டியதால் பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை!

 
suicide

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அலமேலுபுரம் சாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. விவசாயி. இவரது மனைவி ராஜாத்தி. இவர்களது மகள் மஞ்சு (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு சேட்டுவிற்கும், அவரது மனைவி ராஜாத்திக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மஞ்சு அவர்களை சமாதானம் செய்ய முயன்ற நிலையில், அவரை இருவரும் திட்டியுள்ளனர். 

dharmapuri ttn

இதனால் மாணவி மஞ்சு மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். பின்னர், வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது மஞ்சு திடீரென தனது வீட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள், உடனடியாக பாப்பிரெட்டிபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மஞ்சுவை உயிரிழந்த நிலையில் சடலத்தை மீட்டனர். 

இதனை அடுத்து, ஏ.பள்ளிப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.