காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை... அதிர்ச்சியில் காதலனும் தற்கொலை!

 
suicide

ராணிப்பேட்டை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் பிள்ஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டதால், அதிர்ச்சியில் காதலனும் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை அம்மூர் அருகே உள்ள வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது18 வயது மகள், அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மாணவிக்கு, தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கதிர்வேல் என்ற இளைஞரை காதாலித்து வந்துள்ளார். கதிர்வேல் கேட்டரிங் படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

ranipettai

இந்த நிலையில், மாணவியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த கதிர்வேல், அவரது பெற்றோரிடம் சென்று முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பெண் தர மறுத்ததுடன், கதிர்வேலுடன் பழகுவதை கண்டித்துள்ளனர். இதனால் மாணவி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளான கதிர்வேலும், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருவரது உடல்களையும் அடக்கம் செய்ய முயன்ற நிலையில், தகவலின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.