கல்லூரி நிலத்தை விளையாட்டுத்துறைக்கு தர எதிர்ப்பு... திருப்பூரில் அரசுக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

 
tiruppur

திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கலைக்கல்லூரி நிலத்தை  விளையாட்டுத்துறைக்கு வழங்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, ஏராளமான கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி வளாகத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி விளையாட்டு மைதானம் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கல்லூரி ஆட்சிமன்ற குழு, விளையாட்டு மைதானம் அமைக்க நிலத்தை எடுக்க அனுமதிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நிலையில், நிலம் எடுக்கும் முடிவை கைவிடக் கோரி நேற்று 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் வாயில் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

tiruppur

அப்போது, கல்லூரி வளாகத்தில் உள் விளையாட்டு அரங்கு கட்டிய பின் 31 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகவும், இதில் 15  ஏக்கரில் கட்டிடங்கள் உள்ளதாகவும், 5 ஏக்கரில் மரங்கள் வளர்க்கும் நிலையில், 8 ஏக்கரில் மைதானம் அமைந்துள்ளதாகவும் கூறினர். கல்லூரியில் ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய தற்போது அனுமதி கிடைத்துள்ளதகாவும். கூடுதலாக 20 வகுப்பறை கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு, கல்லூரி தேவைக்கே இடப் பற்றாக்குறையாக இருக்கும்போது, 12 ஏக்கர் நிலம் எடுக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.