ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக சங்கர்லால் குமாவத் இன்று காலை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பணிபுரிந்து வந்த சந்திரகலா ஐஏஎஸ், கடந்த அக்டோபர் 1ஆம் முதல் காலவரையற்ற விடுப்பில் சென்றார். இதனை அடுத்து, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் ஆய்வாளர் காமாட்சி கணேசன், முழு கூடுதல் பொறுப்பு ஆட்சியராக நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக சென்னை வணிக வரிகள் (பெரும வரி செலுத்துவோர்) இணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த சங்கர்லால் குமாவத்-ஐ நியமித்து, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உ.த்தரவிட்டார். இதனை தொடர்ந்து, சங்கர் லால் குமாவத், இன்று காலை தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். புதிய ஆட்சியருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


