மயிலாடுதுறை அருகே கூலி தொழிலாளி மர்மமரணம் - மகனிடம் தீவிர விசாரணை!

 
dead

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் மரகதம் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலு. கூலி தொழிலாளி. இவரது மகன் காளிமுத்து. சென்னையில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த வாரம் வீட்டிற்கு வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான பாலு குடித்துவிட்டு குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், பாலு வீட்டில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து பொறையார் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

police

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பொறையார் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, பாலுவின் மகன் காளிமுத்துவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்  பொறையார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.