மொடக்குறிச்சியில் திருமண உதவி தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் விழா... அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு!

 
muthusamy

மொடக்குறிச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 243 பயனாளிகளுக்கு ரூ.1.96 கோடி மதிப்பில் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

muthusamy

இந்த நிகழ்வில், மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட 243 பயனாளிகளுக்கு ரூ.92 லட்சம் மதிப்பில் தங்கக் காசுகளும், ரூ.1.04 கோடி மதிப்பில் திருமண உதவி தொகையும் வழங்கப்பட்டது. இதன்படி மொத்தம் ரூ.1.96 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில், அனைத்து துறை அரசு அதிகாரிகள், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மேலும் அனைத்து கட்சி உறுப்பினர்களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.