ஈரோட்டில் மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!

 

ஈரோட்டில் வேலைக்கு செல்லததால் மனைவி கண்டித்ததால், மில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு சுக்கிரகவுண்ட வலசு  பகுதியை சேர்ந்தவர்  ராஜேந்திரன் (28). மில் தொழிலாளி. ராஜேந்திரன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவருடைய தாய் மல்லிகா கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் ராஜேந்திரன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

erode gh

இதை தொடர்ந்து, ராஜேந்திரனின் தாய் வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் கதவை தட்டினார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் விட்டத்தில் ராஜேந்திரன் சேலையால் தூக்கு போட்ட படி தொடங்கி கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.