கோவை உக்கடம் பெரியகுளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

 
bomb

கோவை உக்கடம் பெரியகுளத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகர காவல் கட்டுபாட்டு அறைக்கு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர்,கோவை உக்கடம் பெரியகுளத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனை அடுத்து, போலீசார் பெரிய குளத்துக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடி பொருட்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது. இதனை அடுத்து, வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

cbe lake

இதனை அடுத்து, மிரட்டல் விடுத்த நபர் மீது குனியமூத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மிரட்டல் விடுத்த நபர் குனியமுத்தூர் கிழக்கு சுகுணாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்த பீர் முகமது என்ற பச்சை மிளகாய் (40) என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து, அவரை போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மதுப்பழக்கத்திற்கு அடிமையான பீர்முகமது,  ஏற்கனவே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 5 முறை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.