மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை… மேலும் ஒருவர் படுகாயம்!

 

மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை… மேலும் ஒருவர் படுகாயம்!

மதுரை

மதுரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் பாத்திரக்கடை தொழிலாளி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர்கள் மகேஸ்வரன்(23), மாரீஸ்வரன்(25). நண்பர்களன இருவரும், மதுரை அனுப்பானடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள பாத்திரக்கடை ஒன்றில் லோடுமேன்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். மாரிஸ்வரன், அண்மையில் நடந்த காவலர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் மகேஸ்வரன், மாரீஸ்வரன் ஆகியோர் பலத்த காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளனர்.

மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை… மேலும் ஒருவர் படுகாயம்!

மாரீஸ்வரனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து கீரைத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, மகேஸ்வரன் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், காயமடைந்த மாரிஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், மகேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மகேஸ்வரனும், மாரீஸ்வரனும் நேற்று ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த மகேஸ்வரன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அறையில் அவர்களுடன் தங்கியிருந்த அஜித் என்ற இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.