டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகைகள் கொள்ளை!

 

டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகைகள் கொள்ளை!

மதுரை

மதுரையில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருப்பாலை மீனாட்சியம்மன் நகரில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ரவிச்சந்திரன் கடந்த 2 நாட்களுக்கு வெளியூரில் நடந்த உறவினர் விட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். பின்னர், அனைவரும் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகைகள் கொள்ளை!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டில் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 38 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ரவிச்சந்திரன், திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.