கொரோனா அச்சத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

 

கொரோனா அச்சத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே கொரோனா அச்சத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மில்லத் நகரில் வசித்து வருபவர் மாதேஸ்வரன். இவரது மகள் ஜீவிதா (16). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ஜீவிதாவிற்கு கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து உள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சீராக வில்லை என கூறப்படுகிறது.

கொரோனா அச்சத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

இதனால் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டதாக கருதிய ஜீவிதா, மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, ஜீவிதாவின் பெற்றோர் அளித்த தகவலின் பேரில், சூளகிரி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.