சென்னிமலையில் கொடிகாத்த குமரன் நினைவு நாள் அனுசரிப்பு!

 
குமரன்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த குமரனின் 90-வது நினைவு நாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த குமரனின் 90-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள கொடிகாத்த குமரனின் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், ஈரோடு மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சோழா ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வீ கோப் டெக்ஸ் தலைவர் யுனிவர்சல் நந்தகோபால் முன்னிலை வகித்தார்.

43

மாநில இலக்கிய அணி அமைப்பாளர் சேலம் பாலன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முருகானந்த பதி, மேற்கு கிளை பொருளாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் செறுக்கலை செங்கோடன், வைரம், ஐயப்பன், சிவசுப்பிரமணியம், கிளை தலைவர்கள் பிரதாப், யோகானந்த், கிருபா, அருண், துணைத்தலைவர் காமராஜ் குஜரால், இளைஞரணி கதீர், பரணி, மணிமுத்து, கவுதம், சதீஷ்குமார், பரமேஸ்வரன், சரவணன் சோமு, ஜீவா, வசந்த், கோகுல், விசு, தமிழினியன், நித்திஷ், ஹரி, ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.