ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

 

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர்

கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் ஏ.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் புலியூர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். தினமும் குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்புவது வழக்கம். அதன் படி, நேற்று முன்தினம் ஓட்டலுக்கு சென்ற விஸ்வநாதன் மாலை வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்து உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஸ்வநாதன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவை உடைத்து அதனுள் வைத்திருந்த 58 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து விஸ்வநாதன் அளித்த தகவலின் பேரில் வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.