கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… புதுமாப்பிள்ளை பலி!

 

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… புதுமாப்பிள்ளை  பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே உறவினர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த சங்கரன்புதூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25). இவர், தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அப்போது, பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த திருணமான வித்யா (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இதனை அறிந்த சுரேஷ்குமாரின் பெற்றோர், அவரை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து, கியாஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுரேஷ்குமார், வித்யாவை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில், சுரேஷின் பெற்றோர் அவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தென்காசியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். அவர் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… புதுமாப்பிள்ளை  பலி!

திருமணத்திற்கு பின் சில மாதங்கள் திருந்தி வாழ்ந்த சுரேஷ், பின்னர் மீண்டும் வித்யாவுடன் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சுற்றித்திரிந்தார். இதனை அறிந்த வித்யாவின் கணவர் கள்ளத்தொடர்பை கைவிடும்படி எச்சரித்துள்ளார். இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு சுரேஷ்குமாரும், வித்யாவும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர்களை புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, இருவரும் கூடங்குளம் பகுதியில் தங்கியிருப்பது தெரிய வந்ததால் போலீசார் கூடங்குளம் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த சுரேஷ்குமாரும், வித்யாவும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். மயங்கி கிடந்த அவர்களை போலீசார் மீட்டு குமரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்றிரவு சுரேஷ்குமார் உயிரிழந்தார். வித்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.