கந்த சஷ்டி விழா : சிவகாசி ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமிக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

 
kanda sasti

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருக பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்து நாடார்கள் உறவின்முறைக்கு மகமைப்பண்டுக்கு உட்பட்ட இந்த கோவிலில் கடந்த 25ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்து வந்தனர். 

kandha sasti

இந்த நிலையில், கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி, இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை ஒட்டி, சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, முருக பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று மாலை கோவில் முன்பு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

கடந்த 6 நாட்களாக கந்தசஷ்டி விரதம் கடைபிடித்து வந்த பக்தர்கள், சூரசம்ஹாரம் முடிந்தவுடன் விரதத்தை முடிப்பார்கள். இதனை தெடர்ந்து,  ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நாளை இரவு நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.