ஈரோடு மாவட்ட பாஜக அலுவலகத்தை காணொலி மூலம் திறந்துவைத்த ஜே.பி.நட்டா!

 
bjp

ஈரோடு மாவட்ட புதிய பாஜக தலைமை அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

bjp

கரூர் பைபாஸ் ரோடு பச்சப்பாளி சாலையில்  அமைந்துள்ள ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திருப்பூரில் இருந்து காணொளி காட்சி வாயிலாக புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.  விழா கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்றக் குழுத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மாநில பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

bjp


இதனையொட்டி, ஈரோடு மாவட்ட புதிய பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், மொடக்குறிச்சி  தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆன டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி, கல்வெட்டினை திறந்துவைத்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட பாஜக தலைவர் எஸ். ஏ. சிவசுப்பிரமணி தலைமை தாங்கினார். நிகழ்வில் தேசிய, மாநில, மாவட்ட,  மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.