திருச்சியில் காவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

 
trichy

திருச்சியில் காவலர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவலர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் கார்த்திகேயன்,  கொரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், அதில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என தெரிவித்தார். 

trichy cop

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் 97 சதவீத காவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதாக கூறிய, ஆணையர் கார்த்திகேயன், மாவட்டத்தில் மொத்தம் 1,400 காவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவித்தார். இதில், 500 காவலர்களுக்கு முதற்கட்டமாக இன்று தடுப்பூசியை செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.