அதிக பயணிகள் ஏறியதால் கவிழ்வது மாதிரிசென்ற அரசுப்பேருந்து... ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு!

 
bus accident

ஈரோட்டில் அதிகளவு பயணிகள் ஏறியதால் அரசுப்பேருந்து சாலையில் கவிழ்வது மாதிரி சென்ற நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் விபத்து தர்விக்கப்பட்டது. 

ஈரோடு பேருந்து நிலையத்தில் நேற்று காலை 11-ஆம் எண் பேருந்து சென்னிமலை நோக்கி கிளம்பியது. இந்த பேருந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் வழியாக, சென்னிமலை ரோடு சென்று ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழியாக சென்னிமலை செல்லும். பேருந்தில் நேற்று காலை 70-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளும்,  சில பொதுமக்களும் ஏறினர்.

erode bus stand

இதனால் பேருந்து வழக்கத்தை விட கூடுதல் பயணிகளுடன் கிளம்பியது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதால் பேருந்து மெதுவாகச் சென்றது. ஈரோடு எஸ்.பி. அருகே சென்றபோது அதிக பாரம் காரணமாக பேருந்தின் பின்பக்க ஜெகப்சர் திடீரென உடைந்தது. இதனால் பேருந்து ஒரு பக்கமாக கவிழ்ந்த மாதிரி சென்றது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

இதனை கண்டு பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் சாமர்த்தியமாக நிறுத்தினார். தொடர்ந்து, பேருந்தில் இருந்த கல்லூரி மாணவ - மாணவிகள், பயணிகளை கீழே இறக்கி விட்டார். பின்னர், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் அந்த  பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான  சூழ்நிலை நிலவியது.