திருச்சியில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தாளாளர் போக்சோவில் கைது!

 
trichy pocso

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பள்ளியின் தாளாளர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் சி.இ. மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் இந்த பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் (50) என்பவர் இருந்து வருகிறார்.  இந்த பள்ளி வளாகத்தில் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவிக்கு, தாளாளர் ஜேம்ஸ் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

arrest

அதன் பேரில், தாளாளர் ஜேம்சிடம், உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர், மீது  ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர்  காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணை நடைபெற்றது. அதில், மாணவிக்கு ஜேம்ஸ் தொல்லை அளித்தது உறுதியான நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இதனிடையே, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஜேம்சின் மனைவி ஸ்டெல்லா மேரியை, பாலியல் புகாரை மறைக்க முயன்ற புகாரின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.