ஆபாச வீடியே எடுத்து மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பெல் ஊழியர் கைது!

 
arrest arrest

திருச்சி அருகே நண்பரின் மனைவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளித்த பெல் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பெல் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிபவர் சாம்ப கண்ணன். இவருக்கு  தனலெட்சுமி(32) என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். சம்ப கண்ணன் வீட்டின் அருகே அவருடன் பணிபுரியும் அருள்ஜோதி என்பவர், வீட்டு மனை வாங்கியுள்ளார். நிலத்தை பார்க்க அடிக்கடி சென்று வந்தபோது சாம்ப கண்ணனின் மனைவி தனலட்சமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

trichy

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில், தனலட்சுமியுடன் தனிமையில் இருந்தபோது, அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அருள்ஜோதி, அதனை காட்டி மிரட்டி தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனை அடுத்து, தனலட்சுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெல் நிறுவன ஊழியரான அருள்ஜோதியை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.