புதுக்கோட்டையில் பிப்.28-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
collector kavidha collector kavidha

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.

paddy farm

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக ஆட்சியர் கவிதா ராமு தெரிவிததுள்ளார்.