கள்ளக்குறிச்சி அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதி விவசாயி பலி!

 
dead

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி.அம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்துள்ளார். இதனை வீரபயங்கரம் பகுதியை அவரது நண்பரான வரதன் என்பவர் கவனித்து வந்தார். இந்த நிலையில், உரிமையாளர் ராமரின் அனுமதியின்றி, வீரபயங்கரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(38) என்பவர் நெல் அறுவடை இயந்திரத்தை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, வரதன் தடுத்து முயற்சித்த நிலையில் அவர் மீது நெல் அறுவடை இயந்திரம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வரதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

kallakurichi ttn

தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வரதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நெல் அறுவடை இயந்திரம் மோதி, விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.