ஈரோடு- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

 

ஈரோடு- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு

நீலகிரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.32 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 28 கனஅடி வீதம் தண்ணீர் வந்து

ஈரோடு- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 950 கனஅடி வீதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்கும், கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் பாசனத்துக்காக அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.