“தொலைந்துபோன குடும்ப அட்டைகளுக்கு பதில், நகல் மின்னணு குடும்ப அட்டை”

 

“தொலைந்துபோன குடும்ப அட்டைகளுக்கு பதில், நகல் மின்னணு குடும்ப அட்டை”

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போனால், மாவட்ட
அளவில் நகல் மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கும் பணி
நடைபெற்று வருவதாக ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழக அரசு பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை குறைக்கும் வண்ணம் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக நேரடியாக நகல் மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்க மென்பொருளில் மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

“தொலைந்துபோன குடும்ப அட்டைகளுக்கு பதில், நகல் மின்னணு குடும்ப அட்டை”


விண்ணப்பதாரர்கள் மின்னணு குடும்ப அட்டை கோரி www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பித்த ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டத்தில், தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரை நேரில் தொடர்புகொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், நகல் மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்குரிய தொகை
ரூ.20 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

“தொலைந்துபோன குடும்ப அட்டைகளுக்கு பதில், நகல் மின்னணு குடும்ப அட்டை”


மேலும், விண்ணப்பதாரர் தொகை செலுத்திய பின்னரே நகல் மின்னணு குடும்ப
அட்டை அச்சிட பரிந்துரை செய்யப்படும் என்றும், பரிந்துரைக்கு பின்னர் மாவட்ட அளவில் அச்சிடப்படும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை, தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் கதிரவன், தெரிவித்துள்ளார்.