கொடுமுடியில் 100 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் முகாம் திறப்பு!

 

கொடுமுடியில் 100 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் முகாம் திறப்பு!

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா தனிமைப்படுத்தும் மையம் பொதுமக்களின் சேவைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுமுடி தாமரை பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 100 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கப்பட்டது.

கொடுமுடியில் 100 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் முகாம் திறப்பு!

இந்த மையத்தினை மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.சரஸ்வதி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, கொடுமுடி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பவர்களை அதிகாரிகள் கண்டறிந்து, இந்த மையத்திற்கு அழைத்து வருவார்கள்.

அவர்களுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா அறிகுறி இருப்பின், அவர்களை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இந்த தனிமைப்படுத்தல் மையம் முழுமையாக அரசால் இலவசமாக செய்து தரப்படுகிறது. இதற்கென மக்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.