அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

கோவையில் இருந்து நேற்று மாலை சேலத்திற்கு 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப்பேருந்து ஒன்று சென்றது. பெருந்துறை அடுத்த திருவாச்சி கூரபாளையம் பிரிவு அருகே சென்றபோது, பேருந்தை முந்திச்சென்ற லாரி ஒன்று, திடீரென இடதுபுறம் திரும்பியது. இதனால் அரசுப்பேருந்து லாரி மீது மோதி சாலையின் நடுவேயிருந்த தடுப்புச்சுவர் மீது சாய்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 13 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட எஸ்.பி தங்கதுரை ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களு உரிய சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.