ஈரோடு- மலைபோல் குவியும் குப்பைகள்! புலம்பித்தவிக்கும் கோபி புதுசாமிகோயில் மக்கள்

 

ஈரோடு- மலைபோல் குவியும் குப்பைகள்! புலம்பித்தவிக்கும் கோபி புதுசாமிகோயில் மக்கள்

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட புதுசாமிகோயில் வீதி மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் நகராட்சி குப்பைகளை கொட்டிவருவதால் மலைபோல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளினால் அப்பகுதி முழுவதும் சுகாதாரசீர் கேடு ஏற்பட்டுள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதுடன் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இக்குப்பைகளைஅகற்றவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரோடு- மலைபோல் குவியும் குப்பைகள்! புலம்பித்தவிக்கும் கோபி புதுசாமிகோயில் மக்கள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்டபகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நாயக்கன்காடு பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் சேகரித்து வந்த நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த பகுதியில் கொட்டி பிரித்து எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட புதுசாமி கோயில் வீதி, பாரதிவீதி, வெங்கட்ராமன்வீதி ஆகிய மூன்றுதெருக்கள் சந்திக்கும் இடத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் முன்பு செயல்பட்டு வந்த பாலவித்தியாலயா பள்ளியில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் சேமித்துவருகிறது.

ஈரோடு- மலைபோல் குவியும் குப்பைகள்! புலம்பித்தவிக்கும் கோபி புதுசாமிகோயில் மக்கள்

பள்ளிவளாகம் முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில் தற்போது சாலையின் பக்கவாட்டில் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் கொட்டிவருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்குசுமார் 2 டன் குப்பைகளுக்கும் மேல் இங்கு கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் குப்பைகளிலிருந்து பாம்புபூரான் தேள் உள்ளிட்டவிஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதி குடியிருப்பில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குஅடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவதாகவும் இந்தகுப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்தின் அருகில் மருத்துவமனைதியானமையம் உள்ளதால் அவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இக்குப்பைகளைஅகற்றவேண்டும் என மூன்று ஆண்டுக்கும் மேலாக நகராட்சி நிர்வதாகத்திற்கு மனு அளித்துள்ள போதும் நாள்தோறும் மீண்டும் மீண்டும் இங்கேயே குப்பைகளை கொட்டிவருதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தில் ஆழ்துளைகிணறு அமைந்துள்ளதாகவும் அதிலிருந்து இப்பகுதிகள் முழுவதிற்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தாகவும் ஆனால் தற்போது குப்பைகளை கொட்டிஆழ்துளை கிணற்றையும் மூடியுள்ளதாகவும் இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதனால் புதுசாமிகோயில் வீதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அகற்றி பாலவித்தியாலயா பள்ளியை தூய்மைப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரோடு- மலைபோல் குவியும் குப்பைகள்! புலம்பித்தவிக்கும் கோபி புதுசாமிகோயில் மக்கள்

இது குறித்துநகராட்சிஆணையாளர் தாணுமூர்த்தியிடம் கேட்டபோது, தனியார் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குப்பைகளை பிரிந்து உரமாக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் விரைவில் அக்குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.