ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்

 

ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவில் பிரமோற்சவ விழா வருகிற, 20-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், 26-ந் தேதி மாலை, 6 மணிக்கு திருக்கல்யாணமும் மறுநாள், 27 ல் காலை, 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.
தற்போது புதிய கொடிமரம் அமைப்பதற்காக பழைய கொடிமரம் அகற்றப்பட்டுள்ளது. 30லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தங்க கொடிமரம் கோவில் வளாகத்தில் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஐப்பசி மாதம் கடைசி வெள்ளிக் கிழமை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் தற்போது நடிக்கம் பிரமோற்சவ விழாவுக்கு, ஆகம விதிகளின் படி தற்காலிக கொடிமரம் அமைத்து திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்

இது குறித்து கோவில் செயல் அலுவலர் கங்காதரன், ’’கஸ்தூரி அரங்கநாதர் கோவில் வருடாந்திர பிரமோற்சவ விழா குறித்து கலெக்டர் கதிரவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கொரோனா பரவலை தடுக்க, தேரோட்டத்தில், 100 பேருக்கு மட்டுமே வடம் பிடிக்க வேண்டும், மற்ற உற்சவங்கள் அனைத்தும் கோவில் வளாகத்தில் மட்டுமே நடத்த வேண்டும், கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை துள்ளியமாக கடை பிடிக்க வேண்டும் என கூறப்பட்டது.

ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்

கொடியேற்றத்துடன் விழா நடத்த வேண்டிய அவசியம் என்பதால், ஆகம விதிகளை பின்பற்றி, பட்டாச்சாரியார்கள் ஆலோசனை பெற்று, தற்காலி கொடிமரம் பிரதிஷ்டை செய்து பின் கொடியேற்றத்துடன் விழா தொடங்கும்’’என்று கூறினார்.