ஈரோடு- கனிமவள அதிகாரி வீட்டில் கணக்கில் வராத 100 சவரன் நகை பறிமுதல்

ஈரோடு- கனிமவள அதிகாரி வீட்டில் கணக்கில் வராத 100 சவரன் நகை பறிமுதல்

ஈரோடு

ஈரோடு மாவட்ட பவானியில் உள்ள திண்டுக்கல் கனிமவளத்துறை உதவி இயக்குனரின் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பவானி கவுண்டர் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவர் திண்டுக்கல் மாவட்டம்

ஈரோடு- கனிமவள அதிகாரி வீட்டில் கணக்கில் வராத 100 சவரன் நகை பறிமுதல்

கனிமவளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் கனிமவள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீடீர் சோதனை மேற்கொண்டு, ஒரு லட்ச ரூபாய்

ஈரோடு- கனிமவள அதிகாரி வீட்டில் கணக்கில் வராத 100 சவரன் நகை பறிமுதல்

பணத்தை பறிமுதல் செய்து, உதவி இயக்குனர் பெருமாளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை அடிப்படையில் நேற்று பவானியில் உள்ள அவரது வீட்டில், டிஎஸ்பி திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசாரணையில் கணக்கில் வராத 100 சவரன் தங்க நகைகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.