ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் எரித்துக்கொலை… மர்மநபர்கள் வெறிச்செயல்!

 

ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் எரித்துக்கொலை… மர்மநபர்கள் வெறிச்செயல்!

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மர்மநபர்கள் தலையில் கல்லால் தாக்கி, எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையில் மயானம் அமைந்துள்ளது. இங்கு ஈமக்காரியங்கள் செய்வதற்காக திறந்தவெளி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அங்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் எரித்துக்கொலை… மர்மநபர்கள் வெறிச்செயல்!

தொடர்ந்து இறந்த நபர் குறித்து விசாரித்ததில், அவர் ஈரோடு அடுத்த சுண்ணாம்பு ஓடை, பாலக்காட்டூரை சேர்ந்த உசேன் சேட்டு (52) என்பது தெரியவந்தது. திருமணமாகாத இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் நஞ்சப்பா நகர் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் உசேன் சேட்டுவின் தலையில் கல்லை போட்டதோடு, அவரை எரித்தும் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்.பி. சசிமோகன், ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.