துரித கதியில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட பணிகள் – ஆட்சியர்

துரித கதியில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட பணிகள் – ஆட்சியர்

ஈரோடு மாவட்டத்தில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் கீழ், பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

துரித கதியில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட பணிகள் – ஆட்சியர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படுமென்று அறிவித்ததாக கூறினார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1,652 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை மாநில அரசின் நிதியிலிருந்தே செயல்படுத்தப்படும் என்ற அறிவித்து, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்தார்.

துரித கதியில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட பணிகள் – ஆட்சியர்
துரித கதியில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட பணிகள் – ஆட்சியர்

அதன்படி, அந்த பணி துரிதமாக இரவு, பகல் பாராமல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறிய ஆட்சியர், இந்தத் திட்டம் 2021 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று கால அளவு நிர்ணயிக்கப்பட்டு, பணி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பவானி, நல்லாகவுண்டன்பாளையம் மற்றும் திருவாச்சி நீரேற்று நிலையம் மற்றும் பவானி தடுப்பணை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, அப்பணிகளை விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

துரித கதியில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட பணிகள் – ஆட்சியர்