ஈரோடு பத்திரிகையாளர்கள் நலச்சங்க பொங்கல் விழா... அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு!

 
pongal

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, பத்திரிக்கையாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. ஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நலச்சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜீவா தங்கவேல் வரவேற்றார். ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராசு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

pongal

சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, பத்திரிக்கையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினார். முன்னதாக அமைச்சர் சாமிநாதன் பேசுகையில் கூறியதாவது: பெரியார், அண்ணா, கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள் தான். தமிழகத்தில் திமுக, அரசு பொறுப்பேற்ற பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு உள்ளது. 

பத்திரிக்கையாளர்களுக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு, அதில் மூத்த செய்தியாளரை உறுப்பினராக நியமித்து நலத் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களின் குறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிந்தவர். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 

pongal

விழா, முடிவில் நலச்சங்க செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில், திமுக ஈரோடு தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், நலச்சங்க முன்னாள் தலைவர்கள் சுந்தரம், த.சண்முகம், கோவிந்தராஜ், முன்னாள் துணை தலைவர் மகேந்திரன், முன்னாள் பொருளாளர் ராமதுரை, சங்க துணை தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி, துணை செயலாளர்கள் ஜோசப் ராஜா, நவீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்