எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில், இளைஞர் உயிரிழப்பு

 

எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில், இளைஞர் உயிரிழப்பு

தருமபுரி

தருமபுரி அருகே எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்லம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 16ஆம் தேதி எருதுவிடும் விழா நடைபெற்றது. போட்டியின் போது காளையை பிடிக்க முயன்ற அதே கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி என்பவரை காளை முட்டியது. இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில், இளைஞர் உயிரிழப்பு

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சின்னதம்பி, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காளை முட்டியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் மூழ்க செய்துள்ளது.